யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
விடைபெற்றார் சவுரவ் கங்குலி
நாக்பூர் (ஏஜென்சி), 10 நவம்பர் 2008   ( 11:30 IST )
எப்போதும் சக வீரர்களை உற்சாகப்படுத்தி,அணியின் வெற்றிக்கு தூண்டுகோலாக இருந்து வந்த சவுரவ் கங்குலி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இன்றுடன் விடைபெற்றார்.

வங்கப்புலி, தாதா, கொல்கத்தா இளவரசர் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கங்குலிக்கு இன்று முக்கியமானதொரு நாள். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இன்றுடன் அவர் ஓய்வு பெற்றார்

கொல்கத்தாவைச் சேர்ந்த 36 வயதாகும் இடது கை பேட்ஸ்மேனான கங்குலி,1992-ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த ஒருநாள் போட்டியின் மூல சர்வதேச கிரிக்கெட்டில் கால் தடம் பதித்தார்.

தனது கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தை 1996-ல் அவர் தொடங்கினார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 112 போட்டிகளில் பங்கேற்று 7127 ரன்களை அவர் குவித்துள்ளார். இதில் 16 சதம், 34 அரை சதம் அடங்கும்.

ஒருநாள் போட்டிகளில், 22 சதம், 72 அரைசதத்துடன் 11,363 ரன்களைத் தொட்டுள்ளார் கங்குலி. இதுதவிர ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 132 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

திறமையை வெளிப்படுத்தி, வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததால், இந்திய அணியின் கேப்டன் பதவி அவரைத் தேடி வந்தது.

சக வீரர்களை எப்போதும் உற்சாகப்படுத்தி அணியின் வெற்றிக்கு தூண்டுகோலாக இருந்து வந்த சவுரவ் கங்குலி, இந்திய அணிக்கு அதிக வெற்றிகளைத் தேடித் தந்த கேப்டன் என்ற பெருமையும் அதன் மூலம் பெற்றார்.

நாக்பூர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 4 ஆவது நாளான நேற்று, கடைசி முறையாக பேட்டிங் செய்யக் களமிறங்கிய கங்குலிக்கு ஏமாற்றம் தான் காத்திருந்தது.இதில் அவர் டக்- அவுட் ஆகி வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

மைதானத்தில் உத்வேகத்துடனும், உணர்ச்சி பூர்வமாகவும் விளையாடிய வந்துள்ள கங்குலி, தனது கடைசி நிமிடம் வரை அந்த பாதையில் இருந்து விலகாது ஒரு வெற்றி வீரராகவே திகழ்ந்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தோல்வியின் விளிம்பில் ஆஸ்திரேலியா
மாஸ்டர்ஸ் டென்னிஸ்: பூபதி இணை வெற்றி
தோல்வியைத் தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்
2வது இன்னிங்ஸ்: ஆஸி.13: இந்தியா 295!
2வது இன்னிங்சில் இந்தியா 295!
நாக்பூர் டெஸ்ட்: இந்தியா 289/9
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...