|
| தோல்வியைத் தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்
|
| நாக்பூர் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 10 நவம்பர் 2008 ( 10:29 IST ) | |
நாக்பூர் கிரிக்கெட் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து தோல்வியைத் தவிர்க்க கடுமையாகப் போராடி வருகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நாக்பூரில் 4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 441 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 355 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன் பிறகு இந்தியா தனது 2வது இன்னிங்சில் 295 ரன்களைச் சேர்த்தது. விஜய் (41), சேவாக் (92), கேப்டன் தோனி (55), ஹர்பஜன் (52) ஆகியோரின் சிறப்பான ஆட்டம், இந்திய அணியை சரிவில் இருந்து மீளச் செய்தது.
திராவிட் 3 ரன்களுக்கும், லக்ஷ்மன் 4 ரன்களிலும், கடைசி போட்டியில் விளையாடு கங்குலி ரன் எதுவும் எடுக்காமலும், சச்சின் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 82.4வது ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்கள் எடுத்தது.
பின்னர் களம்புகுந்த ஆஸ்திரேலியா, 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்திருந்தது.
வெற்றிக்கு இன்னும் 369 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்று காலை ஆஸ்திரேலியா தனது ஆட்டத்தைத் தொடர்ந்தது. அணியின் ரன் எண்ணிக்கை 29 ஆக இருந்தபோது, இஷாந்த் பந்தில் கேடிச் 16 ரன்களுக்கு வெளியேறினார்.
அவருக்குப் பின் களமிறங்கிய கேப்டன் பாண்டிங், 8 ரன்களுக்கு ரன்- அவுட் ஆகி அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்.
8.3 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்துள்ளது. ஹைடன் 19 ரன்களுடனும், கிளார்க் 3 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|