யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
2வது இன்னிங்ஸ்: ஆஸி.13: இந்தியா 295!
நாக்பூர் (ஏஜென்சி),, ஞாயிற்றுக்கிழமை, 9 நவம்பர் 2008   ( 17:25 IST )
ஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட்டின் 2வது இன்னிங்சில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, இன்றைய ஆட்ட முடிவில் 13 ரன்கள் எடுத்தது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. 4வது நாளான இன்று இந்தியா தனது 2வது இன்னிங்சை தொடர்ந்தது.

தொடக்க வீரரான விஜய் அபாரமாக விளையாடி 41 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மற்றொரு வீரர் சேவாக் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் 92 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

தற்கிடையே, ராகுல் திராவிட் வழக்கம் போல் மோசமாக விளையாடி 3 ரன்கள் எடுத்து, வந்த வேகத்தில் வெளியேறினார்.

சேவாக்கும், விஜயும் சேர்ந்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும் அதன் பின்னர் வந்த வீரர்கள் சொதப்ப ஆரம்பித்ததால் ஆட்டத்தின் போக்கு மாற ஆரம்பித்தது.

சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட லக்ஷ்மன் 4 ரன்களிலும், கங்குலி ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். இந்த முறையும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சச்சின் தெண்டுல்கர் 12 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், தோனியும், ஹர்பஜனும் ஜோடி சேர்ந்தனர். தோனியின் விறுவிறுப்பான ஆட்டத்துக்கு ஹர்பஜன் சிங்கும் ஈடுகொடுக்க, ரன் ரேட் மீண்டும் எகிற ஆரம்பித்தது.

இதனால், இந்தியா சரிவிலிருந்து மீளத் தொடங்கியது. இருவரும் அரை சதத்தை கடந்த நிலையில், தோனி தனது 55வது ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, ஹர்பஜன் சிங்குடன் ஜோடி சேர்ந்த ஜாகீர்கான் 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆக, கடைசி நம்பிக்கையான ஹர்பஜன் சிங்கும் 52வது ரன்னுடன் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர், கடைசி விக்கெட்டாக மிஸ்ரா 7 ரன்களில் அவுட் ஆக, இஷாந்த் சர்மா 1 ரன்னுடன் கடைசிவரை களத்தில் நின்றார். இந்திய அணி 82.4வது ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் கிரேஜ்சா மற்றும் வாட்சன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், லீ ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹைடன் 5 ரன்களும், காடிச் 8 ரன்களும் எடுத்தனர்.

1.3 ஓவரில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்த நிலையில் இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது. 5வது நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய அணிக்கு இன்னும் 369 ரன்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
2வது இன்னிங்சில் இந்தியா 295!
நாக்பூர் டெஸ்ட்: இந்தியா 289/9
நாக்பூர் டெஸ்ட்: இந்தியா 200/6
நாக்பூர் டெஸ்ட்: இந்திய விக்கெட்டுகள் சரிவு
355 ரன்களில் சுருண்டது ஆஸி.; இந்தியா 86 ரன்கள் முன்னிலை
அடு‌‌த்தடு‌த்து ‌வி‌க்கெ‌ட்டுக‌ள் சர‌ிவு : ஆஸி. 268/6
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...