யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
நாக்பூர் டெஸ்ட்: இந்தியா 289/9
நாக்பூர் (ஏஜென்சி), 9 நவம்பர் 2008   ( 16:52 IST )
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட்டின் 2வது இன்னிங்சில் இந்தியா 80வது ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. 4வது நாளான இன்று இந்தியா தனது 2வது இன்னிங்சை தொடர்ந்தது.

விஜய் அபாரமாக விளையாடி 41 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சேவாக்கும், இவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 116 ரன்களை சேர்த்தனர். சேவாக் தன் அதிரடி ஆட்டத்தை இடைவேளைக்குப் பிறகும் தொடர்ந்தார். கிரேஜாவின் முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளையும், ஒரு சிக்சரையும் விளாசினார்.

இதற்கிடையே, ராகுல் திராவிட் வழக்கம் போல் மோசமாக விளையாடி 3 ரன்களுக்கு ஹேடினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

சேவாக் சிறப்பாக ஆடி 92 ரன்களை குவித்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் அவுட் ஆனார்.

சேவாக்கும், விஜயும் சேர்ந்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும் அதன் பின்னர் வந்த வீரர்கள் சொதப்ப ஆரம்பித்ததால் ஆட்டத்தின் போக்கு மாற ஆரம்பித்தது.

அதன்படி, சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட லக்ஷமன் 4 ரன்களிலும், கங்குலி ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். இந்த முறையும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சச்சின் தெண்டுல்கர் 12 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், தோனியும், ஹர்பஜனும் ஜோடி சேர்ந்தனர். தோனியின் விறுவிறுப்பான ஆட்டத்துக்கு ஹர்பஜன் சிங்கும் ஈடுகொடுக்க ரன் ரேட் மீண்டும் எகிற ஆரம்பித்தது.

இதனால், இந்தியா சரிவிலிருந்து மீளத் தொடங்கியது. இருவரும் அரை சதத்தை கடந்த நிலையில், தோனி தனது 55வது ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, ஹர்பஜன் சிங்குடன் ஜோடி சேர்ந்த ஜாகீர்கான் 6 ரன்கள் மட்டுமே எடுத்து வந்த வேகத்தில் நடையை கட்டினார். இதன் பின்னர், ஹர்பஜன் சிங்கும் 52வது ரன்னுடன் ஆட்டமிழக்க இந்தியா மீண்டும் நெருக்கடிக்கு ஆளானது.

தற்போது மிஸ்ரா ஒரு ரன்னுடன் களத்தில் உள்ளார். அவருடன் இஷாந்த் சர்மா ஜோடி சேர்ந்துள்ளார்.

இந்திய அணி தற்போது 80.4வது ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா தரப்பில் கிரேஜ்சா 4 விக்கெட்டுகளையும், வாட்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். லீ ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நாக்பூர் டெஸ்ட்: இந்தியா 200/6
நாக்பூர் டெஸ்ட்: இந்திய விக்கெட்டுகள் சரிவு
355 ரன்களில் சுருண்டது ஆஸி.; இந்தியா 86 ரன்கள் முன்னிலை
அடு‌‌த்தடு‌த்து ‌வி‌க்கெ‌ட்டுக‌ள் சர‌ிவு : ஆஸி. 268/6
கேடி‌ச் அவு‌ட் : ஆஸி. 243/3
4வது டெஸ்ட் : ஆஸி. 189/2 ; இந்தியா 441
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...