|
| நாக்பூர் டெஸ்ட்: இந்தியா 200/6 |
| நாக்பூர் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 9 நவம்பர் 2008 ( 15:26 IST ) | |
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட்டின் 2வது இன்னிங்சில் இந்தியா 60வது ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. 4வது நாளான இன்று இந்தியா தனது 2வது இன்னிங்சை தொடர்ந்தது. விஜய் அபாரமாக விளையாடி 41 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
சேவாக்கும் இவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 116 ரன்களை சேர்த்தனர். சேவாக் தன் அதிரடி ஆட்டத்தை இடைவேளைக்குப் பிறகும் தொடர்ந்தார். கிரேஜாவின் முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளையும் ஒரு சிக்சரையும் அடித்தார்.
இதற்கிடையே, ராகுல் திராவிட் வழக்கம் போல் மோசமாக விளையாடி 3 ரன்களுக்கு ஹேடினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
சேவாக் சிறப்பாக ஆடி 92 ரன்களை குவித்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் அவுட் ஆனார்.
சேவாக்கும், விஜயும் சேர்ந்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும் அதன் பின்னர் வந்த வீரர்கள் சொதப்பியதால் ஆட்டத்தின் போக்கு மாற ஆரம்பித்தது.
அதன்படி, சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட லக்ஷமன் 4 ரன்களிலும், கங்குலி ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். இந்த முறையும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சச்சின் தெண்டுல்கர் 12 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில் தற்போது இந்திய அணி நெருக்கடியான நிலையில் ஆடிகொண்டிருக்கிறது.
தோனி 18 ரன்களுடனும், ஹர்பஜன் சிங் 14 ரன்களுடன் தற்போது களத்தில் உள்ளனர். 60.3 வது ஓவரில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|