யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
அடு‌‌த்தடு‌த்து ‌வி‌க்கெ‌ட்டுக‌ள் சர‌ிவு : ஆஸி. 268/6
நா‌க்பூ‌ர் (ஏஜெ‌‌ன்‌சி), சனிக்கிழமை, 8 நவம்பர் 2008   ( 14:12 IST )
நாக்பூ‌ரி‌ல் நடை‌பெ‌ற்று வரு‌ம் இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திரான 4-வது டெஸ்ட் போ‌ட்டி‌யி‌ன் 3ஆம் நாள் ஆ‌ட்ட‌த்‌தி‌ல் ஆஸ்‌திரேலிய அ‌ணி அடு‌த்தடு‌‌த்து விக்கெட்டுகளை இழந்து தடுமா‌றி வரு‌‌கிறது. அ‌ந்த அ‌ணி 6 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்துள்ளது.

அ‌ணி‌யி‌ன் ர‌ன் எ‌ண்‌ணி‌க்கை 255 ஆக இரு‌ந்தபோது 8 ர‌ன்க‌ள் எடு‌த்‌திரு‌ந்த ‌மை‌க்கே‌ல் ‌கி‌ளா‌ர்‌க், இஷா‌ந்‌த் ஷ‌ர்மா‌வி‌ன் ப‌ந்து ‌வீ‌ச்‌சி‌ல் தோ‌னி‌யிடம‌் கே‌ட்‌ச் கொடு‌த்து வெ‌ளியே‌‌றினா‌ர்.

இதையடு‌த்து ஹ‌சியுட‌ன் வா‌ட்ச‌ன் ஜோடி சே‌ர்‌ந்தா‌ர். இ‌ந்‌‌நிலை‌யி‌ல், தனது 12-வது டெ‌ஸ்‌ட் அரைசத‌த்தை பூ‌ர்‌த்‌தி செ‌ய்ததோடு ‌நிதானமாக ‌விளையாடி வந்த ஹ‌சி 229 ப‌ந்துக‌ளி‌ல் 90 ர‌ன்க‌ள் (8 பவு‌‌ண்ட‌ரிக‌ள்) சே‌ர்‌‌த்‌திரு‌ந்த போது ர‌ன் அவு‌ட் ஆனா‌ர்.

தொட‌ர்‌ந்து வா‌ட்சனுட‌ன் ஹேடி‌‌ன் இணை‌ந்தா‌ர். வா‌ட்ச‌ன் 2 ர‌ன்க‌ள் ம‌ட்டு‌ம் சே‌ர்‌த்த ‌நிலை‌யி‌ல் ஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ங் ப‌ந்து ‌வீ‌ச்‌சி‌ல் ‌ஸ்ட‌‌ம்பு‌க‌ள் ‌சிதற அவு‌ட் ஆ‌கி வெ‌‌ளியே‌றினா‌ர்.

இதையடு‌த்து ஹேடினுட‌ன், ஒ‌யி‌ட் ஜோடி சே‌ர்‌ந்து‌ள்ளா‌ர். ஹேடி‌ன் ர‌ன் கண‌க்கை தொட‌ங்காமலு‌ம், ஒ‌யி‌ட் 2 ர‌ன்களு‌ம் எடு‌த்து க‌ள‌த்‌தி‌ல் உ‌ள்ளன‌ர்.

மு‌ன்னதாக, இ‌ந்‌திய அ‌ணி தனது முத‌ல் இ‌ன்‌னி‌ங்‌சி‌ல் ச‌ச்‌சி‌னி‌ன் அபார சத‌ம், க‌ங்கு‌லி, ல‌ட்சும‌ண், தோ‌னி‌யி‌ன் ‌சிற‌ப்பான ஆ‌ட்ட‌த்தா‌ல் 441 ர‌ன்க‌ள் கு‌‌வி‌த்து‌ள்ளது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கேடி‌ச் அவு‌ட் : ஆஸி. 243/3
4வது டெஸ்ட் : ஆஸி. 189/2 ; இந்தியா 441
2 விக்கெட் இழந்து ஆஸி. தடுமாற்றம்
441 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது
இப்போதைக்கு ஓய்வு இல்லை: சச்சின்
அமெரிக்க தடகள வீரர் ஜேம்ஸ் மரணம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...