|
| 4வது டெஸ்ட் : ஆஸி. 189/2 ; இந்தியா 441 |
| நாக்பூர் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008 ( 17:33 IST ) | |
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டின் முதன் இன்னிங்ஸில், ஆஸ்திரேலிய அணி இன்றைய ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் நாக்பூரில் நேற்று துவங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, நேற்றைய ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. இன்றும் 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 124.5வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 441 ரன்கள் எடுத்தது. சச்சின் தெண்டுல்கர் அதிகபட்சமாக 109 ரன்கள் குவித்தார்.
இதைதொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி தனது முதலாவது இன்னிங்சை தொடங்கியது. துவக்க வீரர்களாக ஹைடன், காடிச் ஆகியோர் களமிறங்கினர்.
அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஹைடன் 16 ரன்களில் ரன்-அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் பாண்டிங்கும் 24 ரன்களுக்கு கிளீன் போல்ட் ஆனார்.
19 ஓவர்கள் முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்த தள்ளாடிய நிலையில், 3வது விக்கெட்டுக்கு காடிச்சுடன் ஹஸ்ஸே கைகோர்த்தார். இவர்கள் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர்.
தற்போது, காடிச் 92 ரன்களும், ஹஸ்ஸே 45 ரன்களும் எடுத்து, ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
இன்றைய ஆட்டமுடிவில் ஆஸ்திரேலிய அணி 49வது ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. நாளை 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|