யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
2 விக்கெட் இழந்து ஆஸி. தடுமாற்றம்
நாக்பூர் (ஏஜென்சி), 7 நவம்பர் 2008   ( 15:37 IST )
நாக்பூர் கிரிக்கெட் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் தனது இன்னிங்சை தொடங்கியுள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட் என்ற மைல் கல்லை ஹர்பஜன் எட்டினார்.

நாக்பூர் கிரிக்கெட் டெஸ்டில் இந்திய அணி 441 ரன்களுக்கு ஆட்டமிழந்ததை அடுத்து தற்போது ஆஸ்திரேலியா தனது இன்னிங்சை விளையாடி வருகிறது. துவக்க வீரர்களாக ஹைடன், காடிச் ஆகியோர் களமிறங்கினர்.

அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தது. அனுபவ வீரர் ஹைடன், 16 ரன்கள் எடுத்தபோது ரன்- அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் பாண்டிங், காடிச்சுடன் இணைந்தார்.

ஆனால் அவர் நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஹர்பஜனின் பந்து வீச்சை எதிர்கொள்ள தடுமாறிய பாண்டிங், 24 ரன்களுக்கு கிளீன் போல்ட் ஆனார்.

19 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா, 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. காடிச் 32 ரன்களுடனும், ஹஸ்ஸி ஒரு ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.

முன்னதாக இந்தியத் தரப்பில் விஜய் (33 ரன்கள்), சேவாக் (66), சச்சின் டெண்டுல்கர் (109), வி.வி.எஸ். லட்சுமண் (64), கங்குலி (85), தோனி (56) ஆகியோர் அபாரமாக விளையாடியதால், முதல் இன்னிங்சில் 441 ரன்களை அது குவித்தது.

ஹர்பஜனின் 300வது விக்கெட்:

இன்றைய போட்டியில் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை வெளியேற்றியதன் மூலம், டெஸ்ட் போட்டியில் தனது 300 ஆவது விக்கெட்டை ஹர்பஜன் சிங் கைப்பற்றினார்.

இதுவரை 72 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்பஜன், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 132 விக்கெட்டுகளை தன் வசப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
441 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது
இப்போதைக்கு ஓய்வு இல்லை: சச்சின்
அமெரிக்க தடகள வீரர் ஜேம்ஸ் மரணம்
கங்குலி அரை சதம்: இந்தியா ரன் குவிப்பு
இங்கிலாந்து அணி இந்தியா வந்தது
நாக்பூர் டெஸ்டில் அபாரம்: இந்தியா 311/5
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...