|
| 441 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது |
| நாக்பூர் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008 ( 13:47 IST ) | |
நாக்பூரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்டில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 441 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது கிரிக்கெட் டெஸ்ட நாக்பூரில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்று இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
முதல் நாளில் இந்தியத் தரப்பில் தொடக்க வீரர் விஜய் (33 ரன்கள்), சேவாக் (66), சச்சின் டெண்டுல்கர் (109), வி.வி.எஸ். லட்சுமண் (64) ரன்கள் எடுத்து, இந்திய அணி நல்ல ஸ்கோர் எட்ட உதவினர்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் என்ற நிலையில் இன்று காலை இரண்டம் நாள் ஆட்டத்தை இந்தியா தொடர்ந்தது.
தனது கடைசி டெஸ்டில் விளையாடும் கங்குலி, ஆஸ்திரேலிய பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு தனது 35 ஆவது அரை சதத்தை நிறைவு செய்தார். அவர் 85 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.
கேப்டன் தோனி நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அரைசதம் அடித்தார். அவர் 57 ரன்களுக்கு வெளியேறினார். இதன் பின்னர் வந்த ஜாகீர்கான் (1), மிஷ்ரா (0), இஷாந்த் சர்மா (0) ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
இறுதியில் 124.5 ஓவர்களில் 441 ரன்கள் எடுத்தபோது இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஹர்பஜன் சிங் 18 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் கிரெஜா 8 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஜான்சன், வாட்சன் ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|