|
| இப்போதைக்கு ஓய்வு இல்லை: சச்சின் |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008 ( 13:02 IST ) | |
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், 'எனது உடல்நிலை விளையாடுவதற்கு ஏற்ற வகையில் நன்றாகவே உள்ளது. எனவே ஓய்வு பற்றி நான் சிந்திக்கவில்லை' என்றார்.
'பொதுவாக, தற்போது என்ன நடக்கிறது என்பதப் பற்றி மட்டும் தான் நான் சிந்திப்பேன். இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் என்ன செய்யப் போகிறேன் என்பது பற்றி யோசிக்கவிலை' என்றார் சச்சின்.
'ஓய்வு பெற சரியான தருணம் என்பதை உணர்ந்தால் உடனே அதை செய்வேன்.எனது முடிவை அனைவருக்கும் தெரியப்படுத்துவேன்' என்று கூறிய சச்சின், '2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நான் விளையாடுவதானால் அதற்கு இன்னும் 700 நாட்களுக்கு மேல் உள்ளன. எனது இப்போதையை திட்டம் எல்லாம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் அடுத்த 4 நாட்களைப் பற்றித்தான்' என்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|