|
| கங்குலி அரை சதம்: இந்தியா ரன் குவிப்பு |
| நாக்பூர் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008 ( 11:10 IST ) | |
நாக்பூரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியில், அபாரமாக விளையாடி சவுரவ் கங்குலி அரை சதம் அடித்தார்.இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்களைக் குவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது கிரிக்கெட் டெஸ்ட நாக்பூரில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்று இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
தொடக்க வீரர் விஜய் 33, சேவாக் 66, சச்சின் டெண்டுல்கர் 109 ரன்கள், வி.வி.எஸ். லட்சுமண் 64 ரன்கள் எடுத்து, இந்திய அணி நல்ல நிலையை எட்ட உதவினர்.முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் டக்- அவுட் ஆகி ஏமாற்றம் தந்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. தோனி 4 ரன்களுடனும், கங்குலி 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று காலை அவர்கள் இருவரும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். தனது கடைசி டெஸ்டில் விளையாடும் கங்குலி, ஆஸ்திரேலிய பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு தனது 35ஆவது அரை சதத்தை நிறைவு செய்தார்.
103 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்களைக் குவித்துள்ளது. கங்குலி 57 ரன்களுடனும், தோனி 39 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|