|
| இங்கிலாந்து அணி இந்தியா வந்தது |
| மும்பை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008 ( 11:08 IST ) | |
கெவின் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி நேற்று இந்தியா வந்து சேர்ந்தது.
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ஒருநாள் தொடர் வரும் 14 ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.
அதற்கு முன்பாக வரும் 9 மற்றும் 11 ஆம் தேதிகள் மும்பையில் நடைபெறும் பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது.
இந்தியத் தொடரில் விளையாடும் கெவின் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலாந்து அணியினர் நேற்று மும்பை வந்து சேர்ந்தது.விமான நிலையத்தில் அவர்களை மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்.பின்னர் அனைவரும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இங்கிலாந்து அணி விவரம்: கெவின் பீட்டர்சன் (கேப்டன்), ஆண்டர்ஸன், இயான்பெல், ரவி போபரா, ஸ்டூவர்ட் பிராட், காலிங்வுட், குக், பிளின்டாப், ஹார்மிஸன், சமித் பட்டேல், மேட் பிரையர் (விக்கெட் கீப்பர்), ஓவைஸ் ஷா, சைட்பாட்டம், ஸ்வான் மற்றும் லுக் ரைட்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|