|
| நாக்பூர் டெஸ்ட்: சேவாக் அரை சதம் |
| நாக்பூர் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 6 நவம்பர் 2008 ( 11:47 IST ) | |
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூர் கிரிக்கெட் டெஸ்டில் துவக்க வீரர் சேவாக் அரை சதம் அடித்தார். உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற கேப்டன் தோனி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்படி சேவாக், புதுமுகம் விஜய் இன்னிங்சை தொடங்கினர். சேவாக் வழக்கம் போல் அதிரடியாகவும், விஜய் நிதானமாகவும் ரன்களைக் குவித்தனர். 33 ரன்கள் எடுத்த போது வாட்சன் பந்தில் ஹாடினிடம் கேச் கொடுத்து விஜய் ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து வந்த 'இந்தியச் சுவர்' ராகுல் திராவிட், ரன் எதையும் எடுக்காமல் கிரிஸ்ஜா பந்தில் ஆட்டமிழந்து, அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்.
எனினும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சேவாக், அரை சதம் அடித்தார். அவர் 66 ரன்களுக்கு கிரிஸ்ஜா பந்தில் வெளியேறினார்.
உணவு இடைவேளையின் போது, 24 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. டெண்டுல்கர் 16 ரன்களுடனும், வி.வி.எஸ். லட்சுமண் 4 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|