யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து எதிரான இந்திய அணி அறிவிப்பு
நாக்பூர் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 6 நவம்பர் 2008   ( 10:30 IST )
இங்கிலாந்து எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் முரளி விஜய்க்கு இதில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 14 ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இதில் விளையாடும் இந்திய அணி நேற்று நாக்பூரில் அறிவிக்கப்பட்டது.

ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வாளர்கள் குழு தேர்வு செய்த வீரர்களின் பட்டியலை, பி.சி.சி.ஐ. செயலாளர் என். ஸ்ரீனிவாசன் நாக்பூரில் வெளியிட்டார்.

நாக்பூர் டெஸ்டில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள தமிழக வீரர் முரளி விஜய், ஒருநாள் போட்டிக்கான அணியிலும் இடம் பெற்றுள்ளார். இர்பான் பதானுக்குப் பதில் யூசுப் பதான் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

வீரேந்திர சேவாக் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். பிரவீன் குமாருக்குப் பதில் இஷாந்த் சர்மாவுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க முதல் 3 ஒருநாள் போட்டிகளில் அவருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது.

அணி விவரம்: எம்.எஸ். தோனி (கேப்டன்), வீரேந்திர சேவாக், முரளி விஜய், கவுதம் காம்பீர், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, யூசுப் பதான், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், முனாப் படேல், இஷாந்த் சர்மா, பிரக்யான் ஒஹா, ஆர்.பி. சிங் மற்றும் விரத் கோலி.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
4வது டெஸ்ட்: டாஸ் வென்று இந்தியா பேட்டிங்
4வது டெஸ்ட்: தொடரை வெல்லுமா இந்தியா?
4வது டெஸ்ட்: இந்திய அணியில் தமிழக வீரர் விஜய்
தேசிய நீச்சல்: தமிழக அணி அறிவிப்பு
தடையை நீக்கக் கோரும் காம்பீர் கோரிக்கை நிராகரிப்பு
சென்னை ஓபன் டென்னிஸ்: பயஸ், பூபதி பங்கேற்பு
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...