|
| சச்சினுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் |
| நாக்பூர் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 3 நவம்பர் 2008 ( 15:06 IST ) | |
இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருப்பதாக,நாக்பூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.இதையடுத்து அவரது பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாக்பூர் காவல்துறையினர் கூறும்போது, 'ஜெய் இ- முகமது இயக்கத் தீவிரவாதிகளால் சச்சின் டெண்டுல்கருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்றனர்.
இதையடுத்து சச்சினுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் மேலும் கூறினர்.
இந்த மிரட்டல் குறித்து கருத்து தெரிவித்த சச்சின், 'இந்தியாவுக்குள் விளையாடுவதால் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறேன்.சொந்த மண்ணில் எவராலும் தீங்கு நேரும் என்று எதிர்பார்க்கவில்லை' என்றார்.
இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 4 வது கிரிக்கெட் டெஸ்ட், வரும் 6 ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|