|
| பார்முலா 1 கார் பந்தயம்: ஹாமில்டன் சாம்பியன் |
| திங்கள்கிழமை, 3 நவம்பர் 2008 ( 11:57 IST ) | |
பிரேசில் நாட்டில் நடந்த பார்முலா 1 கார் பந்தயத்தில், 23 வயதே ஆன லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.
கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமானது பர்முலா 1 பந்தயம் ஆகும். மொத்தம் 18 சுற்றுகள் கொண்ட இப்போட்டியின் 18வது மற்றும் இறுதிச் சுற்றுப் போட்டிகள் பிரேசிலில் உள்ள சாவ் பாவ்லோ நகரில் நேற்று நடந்தன.
இப்போட்டியில், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் பிரேசிலின் பிலிப் மசா முதலிடத்தைப் பெற்றார். பந்தயத் தொலைவை அவர் ஒரு மணி 34 நிமிடம் 11.43 வினாடிகளில் கடந்தார்.
இதில், 5 ஆவது இடத்தையே ஹாமில்டன் பிடித்தார். எனினும் ஏற்கனவே நடந்த போட்டிகளில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில், மொத்தம் 98 புள்ளிகளுடன் பார்முலா 1 சாம்பியன் ஆனார் ஹாமில்டன்.
குறைந்த வயதில் பார்முலா 1 பந்தயச் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்ற பெருமையும் ஹாமில்டன்னுக்கு கிடைத்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|