யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஜூனியர் பேட்மிண்டன்: பட்டம் வென்றார் சாய்னா
புனே (ஏஜென்சி), திங்கள்கிழமை, 3 நவம்பர் 2008   ( 11:15 IST )
புனேயில் நடைபெற்ற உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நெஹ்வால் பட்டம் வென்றார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் தொடர் நடைபெற்றது. நேற்று நடந்த மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால், ஜப்பானில் சயாகா சடோவை எதிர்கொண்டார்.

சுமார் 25 நிமிடங்கள் வரை நீடித்த இப்போட்டியில்,21- 9, 21- 18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்றார் சாய்னா.

இதன் மூலம் ஜூனியர் பேட்மிண்டன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

இந்த சாதனை வெற்றி குறித்து சாய்னா கூறுகையில், 'இப்போட்டியில் வென்ற தருணத்தை உணர்வது மிகவும் சிறப்பானது. 2006 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் தோல்வியைச் சந்தித்த நான், இம்முறை பட்டம் வென்றிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது' என்றார்.

இளம் வீராங்கனை சாய்னா நெஹ்வால் அடுத்ததாக சீனா ஓபன், ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டிகளில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டெல்லி டெஸ்ட் 'டிரா' ஆனது!
ஓய்வு பெற்றார் கும்ப்ளே!
கம்பீர் அப்பீல்: விசாரிக்க தெ.ஆப்பிரிக்க நீதிபதி நியமனம்!
டெல்லி டெஸ்ட்: 'டிரா'வில் முடிய வாய்ப்பு!
டெல்லி கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா 43/ 2
கிளார்க் சதம்: டிராவை நோக்கி டெல்லி டெஸ்ட்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...