யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
டெல்லி டெஸ்ட் 'டிரா' ஆனது!
புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2008   ( 16:43 IST )
இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட், வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிவடைந்தது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி இந்தியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகளில் மோதுகிறது. இதில் 3வது டெஸ்ட் டெல்லியில் உள்ள கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.

இஇந்தியா தனது முதல் இன்னிங்சில 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 613 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 577 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடத் தொடங்கிய இந்திய அணி நேற்று ஆட்டநேர இறுதியில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து இறுதி நாளான இன்று தனது ஆட்டத்தை தொடர்ந்த இந்தியா அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. திராவிட் 11, கம்பீர் 36, சச்சின் 47 ரன்கள் எடுத்து வெளியேறினர்.

லக்ஷ்மண் 59 ரன்களுடனும், கங்குலி 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 77.3வது ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்தபோது, இந்திய அணி டிக்ளேர் செய்தது.

இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி தனது 2வது இன்னிங்சை துவக்கியது. ஹைடன் 16 ரன்களுடனும், காடிச் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அந்த அணி விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக ஆட்டம் டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது.

இந்தியா தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லட்சுமணன் ஆட்டநாயகனாக தேர்தெடுக்கப்பட்டார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஓய்வு பெற்றார் கும்ப்ளே!
கம்பீர் அப்பீல்: விசாரிக்க தெ.ஆப்பிரிக்க நீதிபதி நியமனம்!
டெல்லி டெஸ்ட்: 'டிரா'வில் முடிய வாய்ப்பு!
டெல்லி கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா 43/ 2
கிளார்க் சதம்: டிராவை நோக்கி டெல்லி டெஸ்ட்
உலக குத்துச்சண்டை: இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...