|
| ஓய்வு பெற்றார் கும்ப்ளே! |
| டெல்லி (ஏஜென்சி), 2 நவம்பர் 2008 ( 16:13 IST ) | |
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் கேப்டன் அனில் கும்ப்ளே ஓய்வு பெற்றார்.
டெல்லியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டின் கடைசி ஆட்டம் சற்று முன்னர் 'டிரா'வில் முடிந்த நிலையில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஒரு நாள் போட்டிகளில் இருந்து கும்ப்ளே ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் டெஸ்ட் போட்டியில் இருந்தும் தற்போது அவர் ஓய்வு பெற்றுள்ளார்.
தனது ஓய்வு முடிவு பற்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஷஷாங் மனோகரிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டதாகவும், வாரியம் இதனை ஏற்றுக் கொண்டாதாகவும் அவர் கூறியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளவர்களில் 3வது இடத்தில் உள்ளார் கும்ப்ளே. 131 டெஸ்ட் போட்டிகளில் 616 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 35 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
அனில் கும்ளே ஓய்வு அறிவிப்பு காரணமாக, நவம்பர் 6ஆம் தேதி நாக்பூரில் துவங்கவுள்ள 4வது இறுதி டெஸ்ட் போட்டியில் தோனி தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|