|
| கம்பீர் அப்பீல்: விசாரிக்க தெ.ஆப்பிரிக்க நீதிபதி நியமனம்! |
| புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2008 ( 14:07 IST ) | |
டெல்லி டெஸ்டின் முதல் நாளில் ஆஸ்திரேலிய வீரர் வாட்சனை, முழங்கையால் இடித்ததற்காக இந்திய வீரர் கவுதம் கம்பீருக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் உடனடியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) மேல் முறையீடு செய்தது.
இதுகுறித்து விசாரிக்க தென்ஆப்பிரிக்க அரசிலமைப்பு சட்ட நீதிமன்ற மூத்த நீதிபதி அல்பி சாக்ஸ் நியமிக்கப்பட்டிருப்பதாக ஐ.சி.சி. வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியமனம் செய்யப்பட்ட 7 நாட்களுக்குள் அவர் விசாரணை சம்பந்தமான உத்தரவுகளை பிறப்பிப்பார். முந்தைய தண்டனையை உறுதி செய்யவோ அல்லது தீர்ப்பில் மாற்றம் செய்யவோ அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீடு மீது இறுதி தீர்ப்பு வரும் வரை, கம்பீர் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கலாம். நாக்பூரில் வரும் 6ம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்டில் கம்பீர் ஆட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|