யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
டெல்லி டெஸ்ட்: 'டிரா'வில் முடிய வாய்ப்பு!
டெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2008   ( 13:59 IST )
டெல்லி கிரிக்கெட் டெஸ்டில் இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் 61வது ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. இன்று கடைசி நாள் ஆட்டம் என்பதால் இந்த போட்டி 'டிரா'வில் முடியவே அதிக வாய்ப்புள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3வது கிரிக்கெட் டெஸ்ட் டெல்லியில் நடக்கிறது. இப்போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 613 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

பின்னர் ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு தக்க பதிலடி தந்தது. நேற்று 4 ஆம் நாள் ஆட்டத்தின்போது, கிளார்க் - வாட்சன் ஜோடி சிறப்பாக விளையாடி பாலோ ஆனை (414 ரன்கள்) தவிர்த்தது. அந்த அணி 179.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 577 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, இந்திய அணி தனது 2வது இன்னிங்சை துவக்கியது. தொடக்க ஆட்டக்காரர் சேவாக் 16, இஷாந்த் சர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளித்தனர். நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று 5ம் நாள் ஆட்டத்தின்போது, இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. இன்றைய ஆட்டத்தில் கம்பீர் 36, திராவிட் 11, தெண்டுல்கர் 47 ரன்களில் ஆட்டமிழந்தனர். தற்போது லக்ஷமண் 32 ரன்களுடனும், கங்குலி 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

61.2வது ஓவரில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.

இன்று கடைசி நாள் ஆட்டம் என்பதால், டெல்லி டெஸ்ட் 'டிரா'வில் முடியவே அதிக வாய்ப்பு உள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டெல்லி கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா 43/ 2
கிளார்க் சதம்: டிராவை நோக்கி டெல்லி டெஸ்ட்
உலக குத்துச்சண்டை: இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி
பாலோ- ஆனை தவிர்த்தது ஆஸ்திரேலியா
பேட்மிண்டன்: அரையிறுதியில் சாய்னா
சேவாக் அசத்தல் பந்து வீச்சு: ஆஸி- 338/4
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...