யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
டெல்லி கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா 43/ 2
டெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 1 நவம்பர் 2008   ( 17:42 IST )
டெல்லி கிரிக்கெட் டெஸ்டில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 577 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3வது கிரிக்கெட் டெஸ்ட் டெல்லியில் நடக்கிறது. இப்போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில 7 விக்கெட் இழப்புக்கு 613 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

பின்னர் ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு தக்க பதிலடி தந்தது. 3 ஆம் நாளான நேற்று ஆட்டநேர முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று காலை 4 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. கிளார்க் - வாட்சன் ஜோடி சிறப்பாக விளையாடி பாலோ ஆனை (414 ரன்கள்) தவிர்த்தது. வாட்சன் 36 ரன்களுக்கும், ஹாடின் 17 ரன்களுக்கும், ஒயிட் 44 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

மறு முனையில் சிறப்பாக விளையாடி கிளார்க் சதமடித்தார். அவர் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஆடிய பிரட்லீ (8 ரன்கள்), ஜான்சன் (15) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

179.3 ஓவர்களில் 577 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்தியத் தரப்பில் சேவாக் 5 விக்கெட்டுகளையும், கும்ப்ளே 3 விக்கெட்டுகளையும், மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் 2வது இன்னிங்சை துவக்கிய இந்தியாவுக்கு ஆரம்பமே வே அதற்கு அதிர்ச்சியாக அமைந்தது. பிரட்லீயின் பந்தில், 16 ரன்களுக்கு தொடக்க வீரர் சேவாக் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின் 'நைட் வாட்ச்மேனாக' வந்த இஷாந்த் சர்மா, 1 ரன்னுக்கு கிளார்க் பந்தில் பெவிலியன் திரும்பினார்.

4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்துள்ளது.

இன்னும் ஒருநாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இப்போட்டி டிராவில் முடிவடையும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கிளார்க் சதம்: டிராவை நோக்கி டெல்லி டெஸ்ட்
உலக குத்துச்சண்டை: இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி
பாலோ- ஆனை தவிர்த்தது ஆஸ்திரேலியா
பேட்மிண்டன்: அரையிறுதியில் சாய்னா
சேவாக் அசத்தல் பந்து வீச்சு: ஆஸி- 338/4
டெல்லி டெஸ்ட்: ஆஸ்திரேலியா பதிலடி
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...