யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
கிளார்க் சதம்: டிராவை நோக்கி டெல்லி டெஸ்ட்
புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 1 நவம்பர் 2008   ( 15:36 IST )
டெல்லி கிரிக்கெட் டெஸ்டில் அபாரமாக விளையாடி மைகேல் கிளார்க் சதம் அடித்தார். இன்னும் ஒருநாள் மட்டுமே இருப்பதால் இப்போட்டி டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3வது கிரிக்கெட் டெஸ்ட் டெல்லியில் நடக்கிறது. டாஸ் வென்று பேட் செய்த இந்தியா, தனது முதல் இன்னிங்சில 7 விக்கெட் இழப்புக்கு 613 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு தக்க பதிலடி தந்தது. 3 ஆம் நாளான நேற்று ஆட்டநேர முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று 4 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. பாலோ ஆனை தவிர்க்கும் நோக்குடன் கிளார்க் - வாட்சன் ஜோடி விளையாடியது. 36 ரன்களுக்கு வாட்சன் வெளியேறினார். ஹாடின் 17 ரன்களுக்கும், ஒயிட் 44 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

எனினும் மறு முனையில் கிளார்க் அபாரமாக நின்று சதமடித்தார். 170 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 546 ரன்கள் எடுத்துள்ளது. கிளார்க் 105 ரன்களுடனும், பிரட்லீ 6 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இந்தியத் தரப்பில் சேவாக் 5 விக்கெட்டுகளையும், கும்ப்ளே, மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

டெல்லி கிரிக்கெட் டெஸ்ட் முடிவடைய இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் இரு அணிகளும் தங்களது 2வது இன்னிங்சை இதுவரை தொடங்கவில்லை. முதல் இன்னிங்சில் இரு அணிகளும் வலுவான ஸ்கோரை எட்டியுள்ளன. இதனால் இப்போட்டி டிராவில் முடியவே வாய்ப்புகள் அதிகம் என்று கருதப்படுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
உலக குத்துச்சண்டை: இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி
பாலோ- ஆனை தவிர்த்தது ஆஸ்திரேலியா
பேட்மிண்டன்: அரையிறுதியில் சாய்னா
சேவாக் அசத்தல் பந்து வீச்சு: ஆஸி- 338/4
டெல்லி டெஸ்ட்: ஆஸ்திரேலியா பதிலடி
ஒரு டெஸ்ட்டில் விளையாட காம்பீருக்கு தடை
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...