|
| உலக குத்துச்சண்டை: இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி
|
| குவாதல்ஜாரா / மெக்சிகோ (ஏஜென்சி), சனிக்கிழமை, 1 நவம்பர் 2008 ( 13:51 IST ) | |
மெக்சிகோவில் நடைபெற்ற உலக இளையோர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் தாகோம் நானவ் சிங் தகுதி பெற்றுள்ளார்.
குவாதல்ஜாரா நகரில் உலக இளையோர் குத்துச் சண்டை போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் லைட் வெயிட் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் தாகோம் நானவ் சிங், பிரான்ஸ் நாட்டின் ஜெர்மி பெக்குவை எதிர் கொண்டார்.
இதில் 14 - 4 என்ற புள்ளிகள் கணக்கில் நானவ் சிங் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். இதில், கடந்த முறை வெண்கலம் வென்ற ரஷ்யாவின் கிரிகோரி நிகோலக்குடன் அவர் மோதுகிறார்.
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த நானவ் சிங், காமன்வெல்த் குத்துச் சண்டைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவ்வாண்டு கியூபாவில் நடந்த இளையோர் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|