யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
பாலோ- ஆனை தவிர்த்தது ஆஸ்திரேலியா
புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 1 நவம்பர் 2008   ( 11:23 IST )
டெல்லியில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான 3வது கிரிக்கெட் டெஸ்டில் ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடி பாலோ ஆனை தவிர்த்தது.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3வது கிரிக்கெட் டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில 7 விக்கெட் இழப்புக்கு 613 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு பதிலடி தரும் வகையில் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தது. 3 ஆம் நாளான நேற்று, ஆட்ட நேர முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்திருந்தது. கிளார்க் 21 ரன்களுடனும், வாட்சன் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று 4 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. பாலோ ஆனை தவிர்க்கும் நோக்குடன் கிளார்க் - வாட்சன் ஜோடி விளையாடியது. 36 ரன்கள் எடுத்தபோது சேவாக் பந்தில் போல்ட் ஆகி, வாட்சன் வெளியேறினார்.

பாலோ ஆனை தவிர்க்க 414 ரன்கள் தேவை என்ற நிலையில், தனது நிதான ஆட்டத்தின் மூலம் அந்த ஆபத்தில் ஆஸ்திரேலியா தப்பியது.

127 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 415 ரன்கள் எடுத்துள்ளது. கிளார்க் 54 ரன்களுடனும், ஹாடின் 8 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பேட்மிண்டன்: அரையிறுதியில் சாய்னா
சேவாக் அசத்தல் பந்து வீச்சு: ஆஸி- 338/4
டெல்லி டெஸ்ட்: ஆஸ்திரேலியா பதிலடி
ஒரு டெஸ்ட்டில் விளையாட காம்பீருக்கு தடை
டெல்லி டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்
லட்சுமண் இரட்டை சதம்: 613-க்கு இந்தியா டிக்ளேர்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...