|
| பேட்மிண்டன்: அரையிறுதியில் சாய்னா |
| புனே (ஏஜென்சி), சனிக்கிழமை, 1 நவம்பர் 2008 ( 10:56 IST ) | |
புனேயில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டியின் அரையிறுதிக்கு இந்தியாவின் சாய்னா நெக்வால் தகுதி பெற்றார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் இந்தோனேஷியாவின் லிண்டாவினி பனேட்ரியை, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெக்வால் எதிர்கொண்டார்.
சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்த இப்போட்டியில் 21 - 13, 21 - 13 என்ற நேர் செட்களில் சாய்னா வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் சீனாவின் ஷிசியான் வாங்கை எதிர்த்து அவர் களமிறகுகிறார்.
ஆடவர் பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் குருசாய் தத் 21 - 16, 14 - 21, 21 - 19 என்ற செட் கணக்கில் கொரியா நாட்டின் சங் மின் பார்க்கை வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|