|
| சேவாக் அசத்தல் பந்து வீச்சு: ஆஸி- 338/4 |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2008 ( 19:22 IST ) | |
டெல்லி கிரிக்கெட் டெஸ்டின் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்துள்ளது. அசத்தலாக பந்துவீசிய சேவாக் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இன்று காலை விக்கெட் இழப்பின்றி தனது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி, முதலில் கேடிச்சை இழந்தது. 64 ரன்களில் அவர் வெளியேற, சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஹைடன் 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
நெருக்கடியை உணர்ந்து பொறுப்புடன் விளையாடினார் கேப்டன் பாண்டிங். அவர் 87 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அரை சதம் கடந்த ஹஸ்ஸி 53 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.
ஆட்டநேர முடிவில், 105 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்திருந்தது. கிளார்க் 21 ரன்களுடனும், வாட்சன் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்தியத் தரப்பில் சேவாக் சிறப்பாக பந்து வீசி ஹைடன், பாண்டிங், ஹஸ்ஸி ஆகியோரை வெளியேற்றினார். மிஸ்ராவுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.
முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 613 ரன்கள் எடுத்து, ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|