|
| வெற்றிப்பயணம் தொடரும் : சாய்னா நேவால் நம்பிக்கை |
| புனே(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2008 ( 17:08 IST ) | |
காமன்வெல்த் போட்டிகளுக்கு தாம் கடுமையாக தயாராகி வருவதாகவும், தனது சமீபத்திய வெற்றிப்பயணம் தொடரும் என்றும் பேட்மிட்டன் விளையாட்டில் வளர்ந்து வரும் இளம் வீராங்கனையான சாய்னா நேவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹாங்காங்கைச் சேர்ந்த உலகின் 5 ஆவது வீராங்கனையான வாங் சென்ஐ வீழ்த்தி ஒலிம்பிக் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்ற சாய்னா அதைத் தொடர்ந்து நடைபெற்ற சீன தைபி போட்டியில் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
இதனால், 2010ம் ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகளில் சாய்னா நேவால், இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் பெற்றுத் தருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகுதியாக ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,புனேயில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நேவால் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற பின்னர் தாம் சிறப்பாக விளையாடி வருவதாகவும், காமன்வெல்த் போட்டிகளுக்கு தாம் கடுமையாக தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தனது ஒலிம்பிக் அனுபவம் உதவிகரமாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|