|
| பெங்களூரூ டெஸ்ட் : இந்தியா 360/10 |
| பெங்களூரு (ஏஜென்சி), 12 அக்டோபர் 2008 ( 12:58 IST ) | |
இந்தியா -ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே பெங்களூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 360 ரன்கள் எடுத்து,ஆஸ்திரேலிய அணியைவிட இந்திய அணி 70 ரன்கள் பின்தங்கியது.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, இன்று தனது ஆட்டத்தை தொடர்ந்தது.
துவக்கத்தில் களமிறங்கிய இந்திய அணியின் அணித்தலைவர் கும்ப்ளே 5 ரன்கள் எடுத்த நிலையில் வாட்சன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஜாகீர்கானுடன் இணைந்த இஷாந்த் சர்மாவும் அதிக நேரம் தாக்குபிடிக்க முடியாமல் 6 ரன் மட்டும் சேர்த்த நிலையில் கிளார்க் பந்து வீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார்.
ஜாகீர்கான் மட்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 121 பந்துகளில் 57 ரன் எடுத்திருந்த நிலையில், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்தது.
இதன் மூலம் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 360 ரன்கள் எடுத்தது.இதனால் ஆஸ்திரேலிய அணியைவிட இந்திய அணி 70 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஜாகீர்கான் ஆட்டமிழக்காமல் 57 ரன், ஹர்பஜன் 54 ரன், டிராவிட் 51 ரன், கங்குலி 47 ரன், சேவாக் 45 ரன், டெண்டுல்கர் 13 ரன்னும் சேர்த்தனர்.
ஆஸ்ட்ரேலிய அணி தரப்பில் ஜான்சன் 4 விக்கெட், வாட்சன் 3 விக்கெட், மைக்கேல் கிளார்க் 2 விக்கெட், பிரெட்லீ ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹைடன், காடிக் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|