|
| பெங்களூரு டெஸ்ட்: இந்தியா 313/8
|
| பெங்களூரு (ஏஜென்சி), 11 அக்டோபர் 2008 ( 17:25 IST ) | |
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 101 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 430 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி, நேற்றைய ஆட்ட முடிவில் 18.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் எடுத்தது.
இன்று 3வது நாள் ஆட்டம் துவங்கியதுமே விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன. கம்பீர் 21, ஷேவாக் 45, தெண்டுல்கர் 13, திராவிட் 51 ரன்கள் எடுத்தனர். கங்குலி 47, தோனி 9 மற்றும் ஹர்பஜன் சிங் 54 ரன்கள் எடுத்தனர்.
இன்றைய ஆட்ட முடிவில் ஜாகீர்கான் 35 ரன்களுடன் களத்தில் உள்ளார். எதிர்முனையில் கும்ப்ளே இறங்கியுள்ளார். 101வது ஓவரில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜான்ஸன் 4 விக்கெட்டுகளையும், வாட்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். லீ மற்றும் கிளார்க்கே ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|