|
| பெங்களூரு டெஸ்ட்: இந்தியா திணறல்! |
| பெங்களூரு (ஏஜென்சி), 11 அக்டோபர் 2008 ( 11:24 IST ) | |
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து திணறிவருகிறது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங்சில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 430 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, இந்திய அணி நேற்று களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷேவாக் 55 பந்துகளை சந்தித்து 43 ரன்களும், மற்றொரு துவக்க வீரர் காம்பீர், 20 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினர்.
நேற்றைய ஆட்ட முடிவில், இந்திய அணி 18.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் எடுத்தது.
இதை தொடர்ந்து, இன்று 3வது நாள் ஆட்டம் துவங்கியது. ஆட்டம் துவங்கியதுமே இந்தியாவின் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன. 19.2வது ஓவரில் கம்பீர் ஆட்டமிழந்தார். 61 பந்துகளை சந்தித்து அவர் 21 ரன்கள் எடுத்தார்.
அதன் பின், 22.6 வது ஓவரில் ஷேவாக் அவுட் ஆனார். இவர் 64 பந்துகளை சந்தித்து 45 ரன்கள் எடுத்திருந்தார்.
நேற்று அதிரடியாக ஆடி, இன்று அரை சதத்தை தாண்டுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார் ஷேவாக்.
இதையடுத்து களமிறங்கிய தெண்டுல்கர் 13 ரன்களிலேயே வெளியேறினார். இவரை தொடர்ந்து லக்ஷ்மனும் ரன் எதுவும் எடுக்காமலேயே பெவிலியன் திரும்பினார்.
தற்போது திராவிட் 20 ரன்களுடனும், கங்குலி 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
37.2வது ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜான்ஸன் 3 விக்கெட்டுகளையும், லீ 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|