|
| பெங்களூரு டெஸ்டில் சேவாக் அதிரடி: இந்தியா 68/0 |
| பெங்களூரு (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2008 ( 17:19 IST ) | |
பெங்களூரு கிரிக்கெட் டெஸ்டில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் எடுத்துள்ளது.சேவாக் அதிரடியாக விளையாடி அரை சதத்தை நெருங்கியுள்ளார்.
இந்திய அணியின் முதல் இன்னிங்சை வீரேந்திர சேவாக்கும், கவுதம் காம்பீரும் தொடங்கினர். ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியப் பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்ட சேவாக், வழக்கமான அதிரடிப் பாணியில் அடித்து ஆடினார்.
55 பந்துகளை எதிர்கொண்ட சேவாக், 43 ரன்களுடன் களத்தில் உள்ளார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். அரை சதத்தை கடக்க அவருக்கு இன்னும் 7 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. மற்றொரு துவக்க வீரர் காம்பீர், 20 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
முன்னதாக, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 430 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஹஸ்ஸி 147 ரன்களும், கேப்டன் பாண்டிங் 123 ரன்களும் எடுத்தனர்.
நாளை நடைபெறும் மூன்றாம் நாள் ஆட்டத்தில் சேவாக்கின் அதிரடியும், மற்ற வீரர்களின் பொறுப்பான ஆட்டமும் தொடர்ந்தால், ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் இந்தியா அதிக ரன்கள் குவித்து முன்னிலை பெற முடியும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|