யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
430 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸி.
பெங்களூரு கிரிக்கெட் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 430 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அபாரமாக விளையாடி மைக்கேல் ஹஸ்ஸி சதம் அடித்தார்.

நேற்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்திருந்த ஸ்திரேலியா, இன்று காலை தனது இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. வாட்சன் 2 ரன்களுக்கும், ஹேடின் 33 ரன்களுக்கும், பிரட்லி 27 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த ஒயிட் (6), ஜான்சன் (1) ஆகியோர், இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். எனினும் மறுமுனையில் மைக்கேல் ஹஸ்ஸி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைக் குவித்தார். 146 ரன்கள் குவித்த அவர், 4 ரன்களில் அரை சத வாய்ப்பை நழுவ விட்டார்.

இறுதியில் 149.5 ஓவரில், 430 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்தியத் தரப்பில் ஜாகீர் கான் 5 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தற்போது இந்தியா தனது முதன் இன்னிங்சை தொடங்கியுள்ளது. 8 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் எடுத்திருந்தது. காம்பீர் 9 ரன்களுடனும், சேவாக் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஹஸ்ஸி சதம்: வலுவான நிலையில் ஆஸி
வாட்சன் ஆட்டமிழந்தார்: ஆஸி. 300/5
ஆசிய - பசிபிக் அணிக்கு சானியா கேப்டன்
பாண்டிங் சதம்: ஆஸி.- 254/4
கிரெம்ளின் டென்னிஸ்: இவானோவிச் தோல்வி
சரிவில் இருந்து மீண்டது ஆஸி.
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...