யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஹஸ்ஸி சதம்: வலுவான நிலையில் ஆஸி
இந்தியாவுக்கு எதிரான பெங்களூரு கிரிக்கெட் டெஸ்டில், மைக்கேல் ஹஸ்ஸி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையை எட்டியுள்ளது.

இன்று காலை தனது முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலியா, ஷேன் வாட்சனின் விக்கெட்டை முதலில் இழந்தது. இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சில், 2 ரன்களுக்கு அவர் கிளீன் போல்ட் ஆனார்.

இதன் பின்னர் ஹஸ்ஸியுடன் ஹேடின் ஜோடி சேர்ந்தார்.இருவரும் பொறுப்புடன் ஆடி அணியின் ரன் எண்ணிக்கையை மளமளவென்று உயர்த்தினர். 33 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மாவின் பந்தில், லட்சுமணனிடம் கேச் கொடுத்து ஹேடின் வெளியேறினார்.

பின்னர் வந்த ஒயிட், 6 ரன்கள் எடுத்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். எனினும் மறுமுனையில் ஹஸ்ஸி அபாரமாக விளையாடி தனது சதத்தை நிறைவு செய்தார்.

இந்நிலையில், 128 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஹஸ்ஸி 108 ரன்களுடனும், பிரட் லீ ரன் கணக்கைத் தொடங்காமலும் களத்தில் உள்ளனர்.

இந்தியத் தரப்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளையும், ஜாகீர்கான் 2 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வாட்சன் ஆட்டமிழந்தார்: ஆஸி. 300/5
ஆசிய - பசிபிக் அணிக்கு சானியா கேப்டன்
பாண்டிங் சதம்: ஆஸி.- 254/4
கிரெம்ளின் டென்னிஸ்: இவானோவிச் தோல்வி
சரிவில் இருந்து மீண்டது ஆஸி.
முதல்டெஸ்ட்: ஆஸ்திரேலியா 100/1
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...