|
| ஆசிய - பசிபிக் அணிக்கு சானியா கேப்டன் |
| ஹாங்காங் (ஏஜென்சி), 10 அக்டோபர் 2008 ( 10:41 IST ) | |
ஹாங்காங்கில் நடைபெறும் உலக சேலஞ்சர் டென்னிஸ் தொடருக்கான ஆசிய- பசிபிக் அணியின் கேப்டனாக, இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி ஹாங்காங் நகரில் உலக சேலஞ்சர் மகளிர் டென்னிஸ் தொடர் நடைபெறவுள்ளது. ஆசிய பசிபிக் அணியுடன், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய அணிகளும் இத்தொடரில் பங்கேற்கின்றன.
சேலஞ்சர் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் ஆசிய- பசிபிக் அணியின் கேப்டனாக சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா அணிக்கு முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியமும், ரஷ்ய அணிக்கு மரியா ஷரபோவாவும், ஐரோப்பிய அணிக்கு ஜெலீனா ஜான்கோவிச்சும் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|