|
| பாண்டிங் சதம்: ஆஸி.- 254/4 |
| பெங்களூரு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2008 ( 17:53 IST ) | |
இந்தியாவுக்கு ஏதிராக பெங்களூருவில் நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்டின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக விளையாடி கேப்டன் பாண்டிங் சதம் அடித்தார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியக் கேப்டன் ரிக்கி பாண்டிங், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
துவக்க ஆட்டக்காரர் ஹைடன், ஜாகீர்கான் பந்தில் ரன் எதுவும் எடுக்காமலேயே வெளியேறினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ரிக்கி பாண்டிங், துவக்க வீரர் காட்டிசுடன் இணைந்து நிதானமாக ரன் குவித்தார். காட்டிச் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை இஷாந்த் சர்மா கைப்பற்றினார்.
இதன் பின்னர் பாண்டிங்கும், ஹஸ்ஸியும் இணைந்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பாண்டிங், இந்திய மண்ணில் தனது முதல் சதத்தை எடுத்தார். 243 பந்துகளை சந்தித்த அவர், 13 பவுண்டரிகளுடன் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவருக்கு பிறகு களமிறங்கிய மைக்கேல் கிளார்க், ஜாகீர்கானின் பந்து வீச்சிற்கு 11 ரன்களில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டது. ஹஸ்ஸி 46 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|