|
| கிரெம்ளின் டென்னிஸ்: இவானோவிச் தோல்வி |
| மாஸ்கோ (எஜென்சி), வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2008 ( 16:48 IST ) | |
மாஸ்கோவில் நடைபெற்று வரும் கிரெம்ளின் கோப்பை டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவு ஆட்டத்தில், பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான அனா இவானோவிச் 2-வது சுற்றிலேயே தோல்வியைத் தழுவினார்.
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் கிரெம்ளின் கோப்பை டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. புதனன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், தரவரிசையில் 4-ம் நிலையில் உள்ள அனா இவானோவிச், தரவரிசையில் இடம் பெற்றிராத ஸ்லோவேகிய வீராங்கனை சிபுல்கோவாவை எதிர் கொண்டார்.
இந்த ஆட்டத்தில் 6- 3, 2- 6, 7- 6 என்ற செட் கணக்கில் சிபுல்கோவாவிடம் இவானோவிச் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவி, தொடரில் இருந்து வெளியேறினார்.
மற்றொரு காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் ரஷ்யாவின் தினாரா சஃபீனா, பிரான்ஸ் நாட்டின் அமேலி மௌரிஸ்மோவை 6- 7, 6- 4, 6- 4 என்ற செட்களில் வீழ்த்தி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இதில், சக நாட்டவரான் ஸ்வெட்லானா குஸ்னெட்சோவாவை அவர் சந்திக்கிறார்.
இதேபோல் ரஷ்ய வீராங்கனை டீமென்டீவாவும், நாடியா பெட்ரோவாவும் மற்றொரு காலிறுதியில் மோதுகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|