|
| இந்தியா-ஆஸி. இடையே இன்று முதல்டெஸ்ட்! |
| பெங்களூரு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2008 ( 09:29 IST ) | |
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று முன்னிலை பெறும் அணி, தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் இன்று பெங்களூருவில் துவங்குகிறது. கும்ப்ளே தலைமையிலான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கங்குலியின் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், சச்சின் சற்று சோர்ந்துபோயிருப்பதாக தெரிகிறது. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற லாராவின் சாதனையை 77 ரன்கள் எடுத்து சச்சின் முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் இந்த முறை இளம் வீரர்களே அதிகம் இடம்பெற்றுள்ளனர். அதை இந்திய வீரர்கள் சாதகமாக பயன்படுத்திக்கொண்டால் வெற்றிப் பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே, பெங்களூருவில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு 60 சதவீதம் இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதால், போட்டி பாதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|