|
| இந்தியா - ஆஸி. முதல் டெஸ்ட்: நாளை தொடக்கம்! |
| பெங்களூர் (ஏஜென்சி), 8 அக்டோபர் 2008 ( 18:20 IST ) | |
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் பெங்களூரில் நாளை தொடங்குகிறது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணிக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதலாவது போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
இந்திய அணி தரப்பில் பேட்டிங்கில் கவுதம் கம்பீர், ஷேவாக், தெண்டுல்கர், டிராவிட், லட்சுமண், தோனி ஆகியோர் எதிரணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள். பந்து வீச்சில் கும்ப்ளே, ஹர்பஜன்சிங், இஷாந்த் சர்மா ஆகியோர் எதிரணியை மிரட்டுவர் என்று நம்பலாம்.
ஆஸ்திரேலிய அணியில் ஹைடன், கேப்டன் பாண்டிங், மைக்கேல் ஹஸ்ஸி, வாட்சன், கிளார்க் ஆகியோர் சிறப்பாக ஆடி இந்தியாவுக்கு நெருக்கடி தரும் வாய்ப்பு உள்ளது.
சாதனை படைப்பாரா சச்சின்? :
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மேற்கு இந்தியத் தீவு அணி வீரர் பிரையன் லாரா, 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11,953 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரது சாதனையை முறியடிக்க சச்சினுக்கு 77 ரன்கள் மட்டுமே தேவை. 150 டெஸ்ட் போட்டிகளில் 11,877 ரன்கள் குவித்துள்ள சச்சின், இந்த தொடரில் லாரா சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|