யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஆஸி. டெஸ்ட்டுடன் ஓய்வு பெறுகிறார் கங்குலி
பெங்களூர் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 7 அக்டோபர் 2008   ( 17:36 IST )
எப்போது ஓய்வு பெறுவார் என கிளம்பிய யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, வருகிற 9 ஆம் தேதி துவங்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் தாம் டெஸ்ட் போட்டியிலிருந்து ய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான வுரவ் கங்குலி.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் வருகிற 9 ஆம் தேதி துவங்கவுள்ள நிலையில்,முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வீரர்களில் பட்டியலில் கங்குலி இடம் பெறுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

கங்குலியின் ஆட்டம் சமீப வருடங்களாக சோபிக்காமல் போனதன் காரணமாக அவர் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது.

இந்நிலையில், மூத்த வீரர் என்ற முறையில் அணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான வயதையும், நிலையையும் கங்குலி எட்டிவிட்டார். இதனால், கெளரவமான முறையில் அவர் தனது ஓய்வை அறிவிக்கும் சூழலை ஏற்படுத்தவே, அவருக்கு மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்பளிக்கப்பட்டதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் கங்குலி இதனை மறுத்திருந்தார்.இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியுடன் தாம் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக கங்குலி இன்று அறிவித்தார்.

இது குறித்து தாம் தமது சக வீரர்களுக்கு தெரியப்படுத்திவிட்டதாகவும், தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் துவங்குவதற்கு முன்னதாகவே நீங்கள் நிர்ப்பந்தத்தை எதிர்கொள்ள வேண்டியதுள்ளதா எனக் கேட்டபோது, " ஒவ்வொரு தொடரிலுமே நிர்ப்பந்தம் உள்ளது; ஒவ்வொரு முறையும் நன்றாக ஆடத்தான் வேண்டும் " என பதிலளித்தார் கங்குலி.

நான் இளவயது ஆட்டக்காரராக இருந்தபோது அஸாருதீன், ரவி சாஸ்திரி மற்றும் கபில்தேவ் போன்ற ஜாம்பாவான்கள் அணியில் இருந்தார்கள்.நாங்கள் எங்களுக்கான இடத்தைப் பெறும் நிலையில் இருந்தோம்.அதேபோன்ற நிலைதான் தற்போதும் உள்ளது.இளம் ஆட்டக்காரர்கள் அபாரமாக ஆடுகிறார்கள் என மேலும் தெரிவித்தார் கங்குலி.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'அகமதாபாத் ராக்கெட்ஸ்' கேப்டனாக மார்டின்
ஆஸி.யை வீழ்த்துவது இந்தியா நெ.1 ஆக உதவும் : உப்டன்
இந்தியா - பாக். போட்டிக்கு இணை ஏதுமில்லை : கும்ப்ளே
இந்தியாவை வேகப் பந்துவீச்சாளர்கள் சமாளிப்பர் : பான்டிங்
டென்னிஸ் தரவரிசை: பயஸ் 6-ம் இடத்துக்கு முன்னேற்றம்
பிட்பர்கர் பேட்மின்டன் ஓபன்: சேத்தன் ஆனந்த் சாம்பியன்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...