|
| இந்தியா - பாக். போட்டிக்கு இணை ஏதுமில்லை : கும்ப்ளே |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 7 அக்டோபர் 2008 ( 15:13 IST ) | |
கிரிக்கெட் ரசிகர்களை வசீகரிப்பதில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கு இணையேதுமில்லை என்று அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்திய டெஸ்ட் கேப்டன் கும்ப்ளே பேட்டி ஒன்றில் குறிப்பிடுகையில், "எல்லா கிரிக்கெட் தொடருமே ரசிகர்களை வசீகரிக்கக் கூடியது. அதுபோலவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரும். ஆனால், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கு இணை ஏதுமில்லை," என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தியாவின் மூத்த வீரர்கள் எவ்வாறு பூர்த்தி செய்வார்கள் என்று கேட்டதற்கு, "அது விளையாட்டு வீரருக்குரிய சவாலாகும். ஒரு வீரர் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு விளையாட்டு வீரரின் திறனும், உத்வேகமும், போட்டி மனோபாவமும் அவனது நாட்டைப் பெருமையடையச் செய்ய வேண்டும்," என்று கூறினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பற்றி கூறுகையில், "எனது சவால்களை மகிழ்ச்சியாக எதிர்கொண்டு வருகிறேன். இப்போதைக்கு ஓய்வு பற்றி யோசிக்கவில்லை," என்றார் கும்ப்ளே.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | பொய் சொல்ல போறோம் | | நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே... |
| |
|
|
|
|
|
|
|