|
| டென்னிஸ் தரவரிசை: பயஸ் 6-ம் இடத்துக்கு முன்னேற்றம்
|
| புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 6 அக்டோபர் 2008 ( 13:43 IST ) | |
உலக ஆடவர் டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் 6-ம் இடத்துக்கு முன்னேறினார்.
தற்போது தரவரிசை 2 இடங்கள் முன்னேறியுள்ள பயஸ், மொத்தம் 3,060 புள்ளிகள் பெறுள்ளார்.
கடந்த வாரம் நடந்த தாய்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டிகளின் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றார், பயஸ். அதைத் தொடர்ந்து, ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் அவர் இறுதிச் சுற்றுவரை முன்னேறினார்.
இதன் காரணமாகவே, தற்போது வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் பயஸ் வெகுவாக முன்னேறினார்.
அதேநேரத்தில், ஆடவர் இரட்டையர் உலக தரவரிசையில் மகேஷ் பூபதி 2,680 புள்ளிகளுடன் தொடர்ந்து 12-வது இடத்தில் நீடித்து வருகிறார்.
உலக மகளிர் ஒற்றையர் தரவரிசையில், சானியா மிர்சா 7 இடங்கள் பின்னடைவைச் சந்தித்து, 98-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | பொய் சொல்ல போறோம் | | நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே... |
| |
|
|
|
|
|
|
|