யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
பிட்பர்கர் பேட்மின்டன் ஓபன்: சேத்தன் ஆனந்த் சாம்பியன்
புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 6 அக்டோபர் 2008   ( 11:48 IST )
ஜெர்மெனியில் நடந்து முடிந்த பிட்பர்கர் ஓபன் கிராண்ட் பிரீ பேட்மின்டன் தொடரில், இந்தியாவின் சேத்தன் ஆனந்த் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

இதன்மூலம், இந்திய பேட்மின்டன் வரலாற்றில் ஒற்றையர் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றார்.

சேத்தன் ஆனந்த் தனது இறுதிச் சுற்றில், இந்திய வீரரான அரவிந்த் பட் என்ற வீரரையே எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதில், ஆனந்த் 23-25, 24-22, 23-21. என்ற செட்களில் ஒரு மணி நேரம் போராடி அரவிந்தை வீழ்த்தினார்.

காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலம் வென்றுள்ள சேத்தன் ஆனந்த், தற்போது கிராண்ட் பிரீ பேட்மின்டன் போட்டி ஒன்றில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்திய இணை சாம்பியன்

இப்போட்டிகளின் கலப்பு இரட்டையர் பிரிவுக்கான சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் திஜு - ஜ்வாலா குத்தா (சேத்தன் ஆனந்தின் மனைவி) இணை கைப்பற்றியது.

இந்திய இணை தமது இறுதிச் சுற்றில், 8-21, 21-17, 22-20 என்ற செட்களில் டென்மார்க்கின் ஜோக்சிம் ஃபிஷர் மற்றும் கிறிஸ்டினா பெடர்சன் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்திய வாரிய தலைவர் அணி - ஆஸி. பயிற்சிப் போட்டி டிரா
எப்போது ஓய்வு பெற வேண்டுமென எனக்குத் தெரியும்: கும்ப்ளே
ஜப்பான் ஓபன் இறுதியில் பயஸ் இணை தோல்வி
ஜப்பான் ஓபன்: இறுதி போட்டியில் பயஸ் ஜோடி!
பயிற்சி ஆட்டம்: முதல் இன்னிங்ஸில் ஆஸி. 314 ரன்!
3வது நாள் பயிற்சி ஆட்டம்: ஆஸி. 268/9
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பொய் சொல்ல போறோம்
நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல...
தனம்
சரோஜா
ஆரோக்கியம்
நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே...
மேலும் படிக்க|மேலும்...