|
| யு.எஸ். ஓபன் இறுதியில் முர்ரே ; வீழ்ந்தார் நாடல் |
| நியூயார்க் (ஏஜென்சி), 8 செப்டம்பர் 2008 ( 10:51 IST ) | |
யு.எஸ். ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றுக்கு, பிரிட்டனின் ஆண்டி முர்ரே தகுதி பெற்றார்.
இப்போட்டிகளின் தரநிலையில் 6-ம் இடத்திலுள்ள இவர் தனது அரையிறுதிச் சுற்றில், உலகத் தரவரிசையில் முதலிடத்திலுள்ள ஸ்பெயின் ரஃபேல் நாடலை 6-2, 7-6, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
இப்போட்டியில் 6-2, 7-6, 2-3 என்ற செட் கணக்கில் முர்ரே முன்னிலை வகித்த போது, மழை குறுக்கிட்டது.
இதையடுத்து, ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்ட போட்டியில் 3-வது செட்டை இழந்த முர்ரே, நான்காவது செட்டில் நாடலை வீழ்த்தி, இறுதிக்குத் தகுதி பெற்றார்.
இதன்மூலம், யு.எஸ். ஓபன் போட்டிகளின் இறுதிக்கு முன்னேறிய இரண்டாவது பிரிட்டன் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
முர்ரே தனது இறுதிச் சுற்றில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை எதிர்கொள்கிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|