யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
யு.எஸ். ஓபன் : 3-ம் முறையாக செரீனா சாம்பியன்
நியூயார்க் (ஏஜென்சி), 8 செப்டம்பர் 2008   ( 10:03 IST )
யு.எஸ். ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான சாம்பியன் பட்டத்தை, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக கைப்பற்றினார்.

இப்போட்டிகளின் தரநிலையில் 4-ம் இடத்திலுள்ள இவர் தனது இறுதிச் சுற்றில், செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிக்கை இன்று எதிர்கொண்டார்.

மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்ற இப்போட்டியில், செரீனா 6-4, 7-5 என்ற நேர் செட்களில் ஜான்கோவிக்கை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

இது, செரீனாவுக்கு மூன்றாவது யு.எஸ். ஓபன் சாம்பியன் பட்டமும், 9-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமுமாகும்.

இறுதிச் சுற்றில் கடுமையாக போராடிய ஜெலினா ஜான்கோவிக், முதலாவது யு.எஸ். ஓபன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.

இந்த வெற்றியின் மூலம், உலக மகளிர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு, செரீனா வில்லியம்ஸுக்கு கிட்டியுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னை: 'தங்கமகன்' பிந்த்ராவுக்கு டாக்டர் பட்டம்!
யு.எஸ் ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் பெடரர்!
இரானி கோப்பை கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர்
பில்போ செஸ் : டோபலோவிடம் ஆனந்த் தோல்வி
யு.எஸ். ஓபன் இறுதியில் செரீனா - ஜான்கோவிக் மோதல்
யு.எஸ். ஓபன் : இறுதிச் சுற்றில் பயஸ் இணை தோல்வி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...