யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
இரானி கோப்பை கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர்
புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008   ( 16:37 IST )
பரோடாவில் இம்மாதம் 24-ல் தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறும் இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக சச்சின் டெண்டுல்கர் விளையாடவுள்ளார்.

இலங்கை தொடரின் போது காயமடைந்த அவர், அதன் பிறகு ஒரு நாள் தொடரிலும் பங்கேற்கவில்லை.

தற்போது காயத்திலிருந்து முழுதும் குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், இரானி கோப்பை போட்டியில் விளையாடப்போவதாக அறிவித்துள்ளார்.

ரஞ்சி சாம்பியன் டெல்லி அணிக்கும், ரெஸ்ட் ஆஃப் இந்தியாவிற்கும் இடையே நடத்தப்படுவதே, இரானி கோப்பை போட்டியாகும்.

ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பு இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இல்லாததால், முன்னணி வீரர்கள் அனைவரும் இப்போட்டியில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி அணியில் சேவாக், கம்பீர், இஷாந்த் ஷர்மா, கோலி, சங்வான் ஆகியோருடன் ஆகாஷ் சோப்ராவும் இடம்பெறுவார். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் மூத்த வீரர்க‌ள் சச்சின், திராவிட், லஷ்மண், தோனி உள்ளிட்டோர் இடம்பெறுவர் என்று தெரிகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பில்போ செஸ் : டோபலோவிடம் ஆனந்த் தோல்வி
யு.எஸ். ஓபன் இறுதியில் செரீனா - ஜான்கோவிக் மோதல்
யு.எஸ். ஓபன் : இறுதிச் சுற்றில் பயஸ் இணை தோல்வி
டென்னிஸ்: அரையிறுதியில் செரினா- சபினா மோதல்
கலப்பு இரட்டையர் : பயஸ் இணை சாம்பியன்
யு.எஸ். ஓபனில் வரலாறு படைப்பேன் : பயஸ் நம்பிக்கை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...