|
| பில்போ செஸ் : டோபலோவிடம் ஆனந்த் தோல்வி |
| பில்போ (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008 ( 16:27 IST ) | |
ஸ்பெயினின் பில்போவில் நடைபெறும் கிராண்ட் ஸ்லாம் ஃபைனல் செஸ் தொடரின் 4-வது சுற்றில் பல்கேரிய வீரர் டோபலோவிடம், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் அதிர்ச்சித் தோல்வியுற்றார்.
இந்த ஆட்டத்தில் ஆனந்த் கறுப்புக் காய்களுடன் விளையாடினார். பான் காய்களை முதலில் வெட்டுக் கொடுத்த டோபலோவ், தனது மற்ற சக்தி வாய்ந்த காய்களை சிறப்பான விதத்தில் நகர்த்தி ஆனந்தின் கறுப்புக் காய்களுக்கு பெரும் நெருக்கடி கொடுத்தார். இதனை முறியடிக்கத் தவறியதால், உலக சாம்பியனான ஆனந்த் தோல்வியைத் தழுவினார்.
இன்னும் 6 சுற்றுக்கள் உள்ள நிலையில், பல்கேரிய வீரர் டோபலோவ் தற்போது 8 புள்ளிகள் பெற்றுள்ளார்.
மற்ற ஆட்டங்களில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன், அஜர்பெய்ஜான் வீரர் ரத்ஜபோவை வீழ்த்தினார். உக்ரேனிய வீரர் இவான்சுக்கை ஆர்மீனிய வீரர் லெவோன் அரோனியன் வீழ்த்தினார்.
வெற்றிக்கு 3 புள்ளிகள், டிராவிற்கு ஒரு புள்ளி என புள்ளிகளை வழங்குவதில் பரிசோதனை முயற்சியாக புதியமுறை இந்த தொடரில் கடைபிடிக்கப்படுகிறது.
இதனால் கார்ல்சனை 2-ம் இடத்திற்கு தள்ளி டோபலோவ் முதலிடம் பெற்றுள்ளார். அரோனியன் 3-வது இடத்தில் உள்ளார். இத்தொடரில் ஆனந்த் இன்னமும் ஒரு வெற்றியைக் கூடப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|