|
| யு.எஸ். ஓபன் இறுதியில் செரீனா - ஜான்கோவிக் மோதல் |
| நியூயார்க் (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008 ( 10:51 IST ) | |
யு.எஸ். ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸும், செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிக்கும் மோதுகின்றனர்.
இப்போட்டிகளின் தரநிலையில் 4-ம் இடத்திலுள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியஸ் தனது அரையிறுதிச் சுற்றில், ரஷ்யாவின் தினாரா சஃபீனாவை (தரநிலை-6) எதிர்கொண்டார்.
இப்போட்டியில் செரீனா, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் சஃபீனாவை மிக எளிதாக வீழ்த்தினார்.
இந்த வெற்றிக்குப் பிறகு செரீனா வில்லியம்ஸ் பேசுகையில், "வீனஸ் வில்லியம்ஸ் கூறிய சில யோசனைகள், போட்டியில் வெல்ல உறுதுணை புரிந்தது," என்றார்.
மற்றொரு அரையிறுதியில், செர்பியாவின் ஜான்கோவிக் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் எலினா டெமென்டீவை வீழ்த்தி, இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
செரீனா - ஜெலினா இடையே நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில், செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றால், அது அவருக்கு 12-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாக இருக்கும்.
ஒருவேளை ஜெலினா ஜான்கோவிக் வெற்றி பெற்றால், அது அவருக்கு முதலாவது சாம்பியன் பட்டமாக அமையும்.
இவ்விரு வீராங்கனைகளில், யு.எஸ். ஓபன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றப் போகிறவர், உலக மகளிர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிட்டத்தைப் பெறுவர் என்பது கவனத்துக்குரியது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|