|
| யு.எஸ். ஓபனில் வரலாறு படைப்பேன் : பயஸ் நம்பிக்கை |
| நியூயார்க் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 செப்டம்பர் 2008 ( 16:28 IST ) | |
கடந்த 1999 விம்பிள்டனுக்குப் பிறகு, தற்போது யு.எஸ். ஓபனில் ஆடவர் மற்றும் கலப்பு இரட்டையர் என இரு போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைக்கும் நம்பிக்கையில் இருக்கிறார், இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்.
இதுகுறித்து அவர் இன்று அளித்த பேட்டியில், "2008 யு.எஸ். ஓபன் எனக்கு சிறப்பு நிறைந்ததாக அமையும் என்றே நினைக்கிறேன்," என்றார்.
ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு, பயஸ் - செக். குடியரசின் லூகாஸ் டிளவுஹி இணை முன்னேறியுள்ளது.
அதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றுக்கும், இந்தியாவின் பயஸ் - ஜிம்பாப்வேயின் கேரா பிளாக் இணை தகுதி பெற்றுள்ளது.
கடந்த 1999 விம்பிள்டனில் மகேஷ் பூபதியுடனும், லிசா ரேமண்ட்ஸுடனும் இணைந்து விளையாடிய பயஸ், ஆடவர் மற்றும் கலப்பு இரட்டையர் என இரண்டு பிரிவிலும் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
மீண்டும் அத்தகைய சாதனையை புரிவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ள பயஸ், அரையிறுதிச் சுற்றில் மிகச் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|