யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
யு.எஸ். ஓபன் காலிறுதி : வீனஸை வீழ்த்தினார் செரீனா
நியூயார்க் (ஏஜென்சி), 4 செப்டம்பர் 2008   ( 10:59 IST )
யு.எஸ். ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்றில், தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸை, செரீனா வீழ்த்தினார்.

2 மணி நேரம் 25 நிமிடம் வரை நீடித்த கடுமையான போட்டியில், 7-6, 7-6 என்ற செட்களில் டைபிரேக்கரில், வீனஸை தோற்கடித்தார் செரீனா.

இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய செரீனா, "யு.எஸ். ஓபன் இறுதி போன்றே இப்போட்டி மிகவும் கடுமையானதாக இருந்தது. நான் வெற்றி பெற்றேன் என்பதையே நம்பமுடியவில்லை," என்றார்.

இதையடுத்து, போட்டித் தரநிலையில் 4-ம் இடத்திலுள்ள செரீனா வில்லியம்ஸ் தனது அரையிறுதிச் சுற்றில், ரஷ்யாவின் தினாரா சஃபீனாவை (தரநிலை-6) எதிர்கொள்கிறார்.

இதுவரை வில்லியம்ஸ் சகோதரிகளுக்கு இடையே நடந்த போட்டிகளில், செரீனா 9 வெற்றிகளையும், வீனஸ் 8 வெற்றிகளையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆடவர், கலப்பு இரட்டையர் இறுதியில் பயஸ் இணை
தேசிய ஜுனியர் தடகள போட்டி : தமிழகம் சாம்பியன்
யு.எஸ். ஓபன் அரையிறுதியில் பயஸ் இணை; பூபதி தோல்வி
ஐபிஎல் மோகம்: சைமண்ட்ஸுக்கு வாட்சன் அறிவுறுத்தல்
யு.எஸ். ஓபன் டென்னிஸ் : காலிறுதியில் நாடல்
யு.எஸ். ஓபன் : காலிறுதியில் வில்லியம்ஸ் சகோதரிகள் மோதல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...